Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 25 மார்ச் 2025 (17:43 IST)
உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக உள்ள பதவிகளுக்கான இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
மாநில தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, 9 மாவட்டங்களில் வரும் மே மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
 
இதன்படி, 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 315 பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லை உள்ளிட்ட பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
 
சென்னை மாநகராட்சியில் 4 வார்டுகளுக்கான கவுன்சிலர் பதவிகள் உட்பட 133 காலியிடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, மே மாதத்திற்குள் இடைக்காலத் தேர்தல் நடத்த மாவட்ட அளவிலான தேர்தல் ஏற்பாடுகளை விரைவாக முடிக்க மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி போட்டோ மாத்தி ஏமாத்த முடியாது! சிப் பொருத்திய e-Passport அறிமுகம்!

மசோதா நிறைவேற்ற காலக்கெடு நிர்ணயிப்பதா? உச்சநீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி..!

எங்க விசுவாசம் பாகிஸ்தான் கூடத்தான்..! இந்தியாவை காலை வாரிவிட்ட துருக்கி! - அதிபர் ஓப்பன் அறிவிப்பு!

ஆபரேஷன் சிந்தூருக்கு பின் ஜம்மு காஷ்மீரில் ஆய்வு.. நேரில் செல்கிறார் ராஜ்நாத் சிங்..!

தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பம் பதிவாகலாம்.. வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments