இன்ஸ்டா காதல்; தன்னையே நிர்வாண வீடியோ எடுத்த 16 வயது சிறுமி! காதலன் நடத்திய நாடகம்!

Prasanth Karthick
வியாழன், 27 ஜூன் 2024 (10:48 IST)

கரூரில் 16 வயது சிறுமியை காதல் வார்த்தைகள் பேசி மயக்கி ஆபாச வீடியோக்களை பெற்று மிரட்டிய காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தாராபுரம் அருகே உள்ள மூலனூரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். இவருக்கும் கரூர் மாவட்டம் விஜயமங்கலம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற 27 வயது இளைஞருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில் இருவரும் வீடியோ காலில் பேசிக் கொள்வது என காதலை தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் விக்னேஷ் அந்த சிறுமியிடம் நிர்வாணமாக வீடியோ எடுத்து அனுப்புமாறு கேட்டுள்ளார். அதை பார்த்துவிட்டு டெலிட் செய்து விடுவதாக அவர் கூறியதை நம்பி சிறுமியும் வீடியோ எடுத்து அனுப்பியுள்ளார்.
 

ALSO READ: குளம் போல காட்சியளிக்கும் கயானா மைதானம்… போட்டி நடந்தா மாதிரிதான்!

அந்த வீடியோவை வைத்துக் கொண்டு விக்னேஷ் அந்த சிறுமிக்கு தொல்லைக் கொடுக்க தொடங்கியுள்ளார். தன் ஆசைக்கு இணங்குமாறும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் விக்னேஷ் மிரட்டத்தொடங்கவே அந்த சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸார் விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்