Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி....விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (22:10 IST)
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தொடர்ந்து அதிகரித்து வரும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி  சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் நெசவாளர்கள் இன்று முதல் 5 நாட்களுக்கு வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
 
அருப்புக்கோட்டையில் சுமார் 5,000 விசைத்தறிகள் இயங்கி வருகிறது இந்த விசைத்தறி தொழிலை நம்பி நெசவாளர்கள் மற்றும் அதனை சார்ந்த சாயம் பூசுதல் பசை ஓட்டுதல் போன்ற தொழில்களை தொழிலாளர்  என மொத்தம் 20,000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
 
இந்நிலையில் தற்போது தொடர்ந்து அதிகரித்துவரும் நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
 
நூல் வாங்க முடியாமலும் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளி ரகங்களை விலை அதிகமாக விற்பணை செய்ய முடியாமலும் நெசவாளர்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில்
நூல் விலை .
 
உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் நெசவாளர்கள் இன்று முதல் 5 நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
 
குறிப்பாக பஞ்சு நூல் ஏற்றுமதியை உள்நாட்டுத் தேவைக்குப் போக மீதியை ஏற்றுமதி செய்ய வேண்டும் விசைத்தறி தொழிலை பாதுகாக்க தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் நூல் விலையை நிர்ணயம் செய்ய கமிட்டி அமைக்க வேண்டும் மேலும் ஜிஎஸ்டி கட்டும் நெசவு உற்பத்தியாளர்களுக்கு சலுகை விலையில் நூல் சப்ளை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் 5 நாட்களுக்கு நெசவாளர்கள் தங்களது வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
 
இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் விசைத்தறிகள் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சேலைகள் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது .இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலிக்கு நெசவு செய்யும் நெசவாளர்கள் வேலையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments