கரூரில் அடையார் ஆனந்த பவன் ஹோட்டலில், வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் பூச்சி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அடையார் ஆனந்தபவன் என்ற உயர்தர சைவ ஹோட்டலில் இன்று காலை திருச்சியை சார்ந்த வழக்கறிஞரும், உதவி அரசு வழக்கறிஞருமான ரவி தனது குடும்பத்துடன் கரூரில் உள்ள இந்த உணவகத்தில் உணவு அருந்தியுள்ளனர்.
அப்போது, அவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவுகளில், சாம்பாரில் பூச்சி இருந்ததாக கூறப்படுகிறது. நீதிபதி அதுவும் பெண் நீதிபதி உணவிலேயே பூச்சி இருப்பதாகவும், அந்த பாதிக்கப்பட்ட அரசு உதவி வழக்கறிஞர் ரவியிடம் ஹோட்டல் நிர்வாகத்திடம் சமாதானப்படுத்த முயன்றுள்ளனர்.
பின்னர் வாக்குவாதம் நீடித்த நிலையில் செல்பேசி வழியாக அனைத்து துறைகளுக்கும் புகார் தெரிவித்து அவர்கள் குடும்பத்துடன் திருச்சிக்கு காரில் புறப்பட்டனர்.
இதையடுத்து கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மீனாட்சி சுந்தரம் மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் திடீரென்று ஆய்வு மேற்கொண்டு ஹோட்டலின் உணவுகளை பற்றி திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்களை, அடையார் ஆனந்தபவன் கரூர் மேலாளர் இசக்கி சமாதானப்படுத்தி அனுப்பினார்.
கரூரில் உள்ள உயர்ரக சைவ ஹோட்டலான அடையார் ஆனந்தபவன் ஹோட்டலில் நடந்த இச்சம்பவம் இங்கு வரும் வாடிக்கையாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.