Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போலீசாரின் பொறுமையும் அர்ப்பணிப்பும் கண்டு வியந்தேன் : சுவாதி பணி புரிந்த நிறுவன ஹெச். ஆர்

போலீசாரின் பொறுமையும் அர்ப்பணிப்பும் கண்டு வியந்தேன் : சுவாதி பணி புரிந்த நிறுவன ஹெச். ஆர்
, சனி, 2 ஜூலை 2016 (18:00 IST)
சுவாதி கொலை வழக்கில் விசாரணையில் ஈடுபட்ட தமிழக போலீசாரின் திறமையும், பொறுமையும், அர்ப்பணிப்பும் கண்டு வியந்தேன் என்று சுவாதி பணிபுரிந்த இன்போசிஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி சுஜித்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
இதுபற்றி அவர் தன்னுடைய பேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது;
 
கடந்த 5 நாட்களாக நான் தினமும் 15 மணி நேரமாவது தமிழக போலீசாருடன் செலவிட்டேன். ஆனால், போலீசார் பட்ட கஷ்டத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் எங்களுடைய கஷ்டம் மிகவும் குறைவு.
 
15 நாட்கள் அவர்களின் விசாரணைக்கு நான் உதவியாக இருந்தேன். அப்போது, அவர்களின் விசாரணையை பார்த்து நான் வியந்துள்ளேன். இந்த வழக்கை விசாரிக்க குறிப்பிட்ட சில திறமையான காவல் அதிகாரிகளை தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்தனர். அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பொறுமையை பார்த்து நான் ஆச்சர்யப்பட்டேன்.
 
அவர்களின் ஒரே குறிக்கோள், இந்த வழக்கில் கிடைக்கும் சிறு சிறு தடயங்களையும், ஆதாரங்களையும் சேகரிப்பதாக மட்டுமே இருந்தது. சாட்சியங்களை பேச வைக்க அவர்கள் எடுத்த முயற்சியும் நடந்து கொண்ட விதமும்  அபாரம்.
 
விசாரணை அதிகாரிகள் பலரும், இந்த கொலையை, தங்களுக்கு நேர்ந்த அவமானமாகவே கருதி பணியாற்றினர். ஒரு நாள் இரவு 1 மணிக்கு,  என்னிடம் ஒரு அதிகாரி இப்படி கூறினார். "சார், ஆயுதம் இன்றி நிராயுதபாணியாக நின்ற ஒரு இளம்பெண் பிள்ளை மீது அரங்கேற்றப்பட்ட கொடூர கொலை இது. என்ன விலை கொடுத்தாவது கொலையாளியை நாங்கள் பிடித்தே தீர வேண்டும். அல்லது, பொதுமக்கள், எப்போதும் பயத்துடன் வாழவேண்டியிருக்கும். முக்கியமாக, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இது பீதியை ஏற்படுத்திவிடும்" என்று கூறினார்.
 
எங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் மதியம் அல்லது இரவு சாப்பாட்டுக்கு கேபினை விட்டு வெளியே செல்லும்போதெல்லாம், போலீசார் ஓடிவந்து அவர்களிடம் பேச்சு கொடுத்து, சுவாதி பற்றி விசாரிப்பார்கள். பல நேரங்களில் உணவு கூட சாப்பிடாமல், ஒரு கப் காபியோ, டீயோ மட்டுமேதான் குடித்துவிட்டு அவர்கள் வேலை செய்ததை நான் பார்த்தேன். நாள் முழுவதும் விசாரணை செய்துவிட்டு, நள்ளிரவில் கூட ஆய்வு மீட்டிங் இருக்கிறது என்பார்கள். காலையிலேயே அடுத்தகட்ட விசாரணைக்கு போலீசார் தயாராக இருப்பார்கள். அதேபோல், அவர்கள் விசாரணை நடத்தியவர்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். ஒரு பக்கம் அவர்கள் இப்படி கடுமையாக உழைத்துக் கொண்டிருந்ததை, சில மீடியாக்கள் புரிந்து கொள்ளாமல் தவறாக எழுதி வந்தன.
 
நேற்று இரவு நான் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற போது, தொலைக்காட்சியில்,  சுவாதி கொலையாளி பிடிபட்டதாக செய்தி பார்த்தேன். எங்கள் நிறுவனத்தில் விசாரணை நடத்திய ஒரு அதிகாரிக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அது உண்மையா என கேட்டேன். சில நிமிடங்களிலேயே 'யெஸ் சார்' என பதில் வந்தது. சில நாட்களுக்கு பிறகு நிம்மதியாக தூங்கினேன். தமிழக போலீசாருக்கு என் பாராட்டுக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவாதி கொலையாளியை பிடித்த காவல்துறைக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு