Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை மாற்றம் என தகவல்

Sinoj
புதன், 14 பிப்ரவரி 2024 (10:30 IST)
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வருகிறது.  நேற்று, எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இவ்விவகாரம் குறித்து இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சில மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகிறது.

அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை மாற்றம் செய்யப்பட்டு 2 வது வரிசையில் முன்னாள்  பேரவைத் தலைவர்கள் தனபாலுக்கு அருகில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை விடுக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுபற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சபாநாயகரிடம்  நேற்று வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பாஜகவுக்கு காலை வாரிவிட்ட உத்தரபிரதேசம்.. சமாஜ்வாடி ஜனதா கட்சி அபார வெற்றி..!

மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி ஏழை எளிய மாணவர்களுக்கு அறுசுவை உணவு!

ஒடிஷாவில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக.. நவீன் பட்நாயக் ஆட்சிக்கு முடிவு..!

கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கிய மம்தா.! மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை.!!

ஆந்திராவில் நடிகை ரோஜா பின்னடைவு.. ஆட்சியை இழக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments