Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

21 ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட பச்சிளம்குழந்தை – மும்பையில் நடந்த பயங்கரம் !

Advertiesment
21 ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட பச்சிளம்குழந்தை – மும்பையில் நடந்த பயங்கரம் !
, சனி, 7 டிசம்பர் 2019 (08:10 IST)
மும்பை கண்டிவாலி பகுதியில் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று 21 ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

மும்பையின் புறநகர் பகுதிகளில் ஒன்றான கண்டிவாலி பகுதியில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரியத்தின் கட்டிடத்தில் இருந்து பெண் குழந்தை ஒன்று அடையாளம் தெரியாத நபரால் தூக்கி வீசப்பட்டுள்ளது. இதில் அந்த குழந்தை இறந்துள்ளது.

இது சம்மந்தமான விசாரணையை போலீஸார் நடத்தி வருகின்றனர். குழந்தையை தூக்கி வீசியது யார் என்ற விவரம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த பகுதியில் அமைந்துள்ள சிசிடிவி கேமராக் காட்சிகளைக் கொண்டும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குழந்தையின் சடலத்தை வைத்து பார்க்கும்போது அது பிறந்த கொஞ்ச நேரமே ஆகியிருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்கவுண்டர் செய்யப்பட்ட நால்வர் உடல்: தெலங்கானா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.