Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது நாளாக ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் தொடர் மகிழ்ச்சி..!

Siva
செவ்வாய், 22 ஜூலை 2025 (09:45 IST)
இந்திய பங்குச்சந்தை, நேற்று வாரத்தின் முதல் நாள் ஏற்றத்துடன் வர்த்தகமான நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு தொடர் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
 
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியதும், மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 113புள்ளிகள் உயர்ந்து 82333 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி 17 புள்ளிகள் உயர்ந்து 25110 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச் சந்தையில், அப்போலோ ஹாஸ்பிடல், ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், டி.சி.எஸ்., டெக் மஹிந்திரா, டைட்டன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
 
அதே சமயம், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், சிப்லா, ஹீரோ மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், இன்போசிஸ், ஐ.டி.சி., ஜியோ ஃபைனான்சியல் மாருதி சுசுகி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், சன் பார்மா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகளின் விலை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்ணீர் பிடிக்கச் சென்ற சிறுமி! வாயை பொத்தி வன்கொடுமை! - நீலகிரியில் அதிர்ச்சி சம்பவம்!

தேனாம்பேட்டை அப்பல்லோவுக்கு மாற்றப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின்! எப்படி இருக்கிறார்?

அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் சிசிடிவி கட்டாயம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

சைடிஷ் சரியாக வழங்கவில்லை என தகராறு.. பார் ஊழியர் குத்தி கொலை..!

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என சொன்னது ஏன்? ஈபிஎஸ் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments