சென்னையில் ஆட்டோ டிரைவர் ஒருவரை மக்கள் நீதி மய்ய பெண் பிரமுகரான ஸ்னேகா மோகன்தாஸ் செருப்பால் அடித்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த சினேகா மோகன்தாஸ் சமூக ஆர்வலராகவும், மநீம கட்சியின் மாநில செயலாளராகவும் இருந்து வருகிறார். நேற்று சென்னையில் ஆட்டோ டிரைவர் ஒருவரை நடுரோட்டில் சினேகா மோகன்தாஸ் செருப்பால் அடித்துத் தாக்கிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் மீதே வழக்குப்பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் என்ன நடந்தது என்று சினேகா மோகன்தாஸ் விளக்கமளித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “நானும் எனது தோழி ஒருவரும் பிரெசிடென்சி கல்லூரி செல்வதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறினோம். முதலில் மேப் பார்த்து ஓட்டி சென்ற அந்த டிரைவர் அதற்கு பிறகு மேப்பை ஆப் செய்துவிட்டார். பிரசிடென்சி கல்லூரி செல்லாமல் ஏதேதோ சாலைக்குள் புகுந்து சென்றுக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், எங்களை ஒருவிதமாக பார்த்துக் கொண்டே இருந்தார்.
சில வாகனங்கள் மீது மோதுவது போல சென்றார். இதனால் எங்களுக்கு சந்தேகம் எழவே ஏன் எங்கெங்கோ ஓட்டிச் செல்கிறீர்கள் என கேட்க போக, ஒருமையில் திட்டினார். அதன் பின்னர் நான் இறங்கி அவரிடம் வாக்குவாதம் செய்தபோது அவர்தான் என்னை முதலில் அடித்தார். அதற்கு பிறகே நான் அவரை அடித்தேன். சில ஊடகங்களில் இது தவறாக காட்டப்படுகிறது. இதுதான் உண்மையில் நடந்தது. ஆனால் நான் ஒரு ஆட்டோ டிரைவரை அல்ல, ஒரு ஆணை தாக்கி விட்டேன் என்பதாலேயே என்னை சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சிக்கிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K