Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடகி சுசித்ரா மீது பிரபல அரசியல் கட்சி போலீஸ் புகார்

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2017 (22:35 IST)
கடந்த சில நாட்களாக கோலிவுட் திரையுலகமே அதிரும் வகையில் பாடகி சுசித்ரா தனது டுவிட்டரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அவருடைய அடுத்த வீடியோ என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், திரையுலகினர் அது நம்ம வீடியோவாக இருக்க கூடாது என்ற கவலையில் உள்ளனர்




இந்நிலையில் தற்போது இளைஞர்களின் கவனம் நெடுவாசல் நோக்கி இருக்கும் நிலையில் சமூகவலை தளங்களில் தவறான படங்களை வெளியிடுவதன் மூலம் இளைஞர்களின் கவனம் திசைதிரும்ப வாய்ப்புள்ளதாக இந்திய தேசிய லீக் கட்சி, பாடகி சுசித்ரா மீது குற்றம் சுமத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி பாடகி சுசித்ரா மீது சென்னை மாநகர காவல் ஆணையத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் புகார் மனு ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாடகி சுசித்ராவின் தரப்பு இதுகுறித்து கூறியபோது, அவர் கடந்த மூன்று வாரங்களாக தன்னுடைய டுவிட்டரை பயன்படுத்தவில்லை என்றும் இது முழுக்க முழுக்க ஹேக்கர்களின் கைவரிசை என்றும் கூறி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்..!

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் திருச்சி சிவா? பரபரப்பு தகவல்..!

ரியல் எஸ்டேட் போட்டி! கட்டுமான நிறுவனங்கள் சிறப்பு வசதிகளை விளம்பரம் செய்ய தடை!

வாக்காளர் பட்டியல் மோசடி குற்றச்சாட்டு.. குரங்குகள் நீதிமன்றம் செல்லலாம்.. சுரேஷ் கோபி சர்ச்சை கருத்து

ராஜஸ்தான் மாநிலம் ஒரு நீல நிற பிளாஸ்டிக் பேரலுக்குள் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரையில்
Show comments