வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. உறுதி செய்தது இந்திய வானிலை ஆய்வு மையம்

Siva
புதன், 22 மே 2024 (10:00 IST)
தென்மேற்கு வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகும் என்று ஏற்கனவே இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.

இந்த றைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 24ஆம் தேதி காலைக்குள் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடையும் என்றும், இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மிகவும் அரிதாகவே கோடை காலத்தில் அதுவும் மே மாதத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றும் என்ற நிலையில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திர நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பது வானிலை ஆய்வு மைய அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி.. 10 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்..!

இன்று முதல் மக்கள் சந்திப்பு பயணத்தை மீண்டும் தொடங்கும் விஜய்! காஞ்சிபுரத்தில் முதல் நாள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments