Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் Big SuperStar -ன் படத்திற்கு டிக்கெட்டுடன் விடுமுறை- CNN நிறுவனம் செய்தி வெளியீடு

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (17:28 IST)
ரஜினியின் ஜெயிலர் படம்  உலகம் முழுவதும்   நேற்று ரிலீஸான  நிலையில், இப்படம் பற்றி அமெரிக்க பிரபல  செய்தி நிறுவனம் செய்தி  வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில்,  நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். இப்படம்  நேற்று  உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது.

ரஜினியுடன் இணைந்து  மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன்  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள்  நடிப்பில், அனிருத் இசையில்,  சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு  வெளியான இப்படம், ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

நேற்று வெளியான முதல் நாளில் மட்டும் இப்படம்  உலகம் முழுவதும் ரூ.100 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. எனவே, இனி வ்ரும் நாட்களிலு வாரக் கடைசியிலும் இப்படம்  வசூலில் சாதனை படைக்கலாம் என்று கூறப்படுகிறது.

இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே,   பிரபல தனியார் கம்பெனிகள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் பட ரிலீஸுக்காக ஆகஸ்ட் 10 ஆம் தேதி விடுமுறை அளிப்பதாக அறிவித்து சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.

இதுபற்றி அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல CNN என்ற செய்தி நிறுவனம், இந்தியாவின் Big SuperStar -ன்  ஜெயிலர் படத்திற்கு டிக்கெட் கொடுத்து விடுமுறையும் அறிவித்த கார்பரேட் நிறுவனங்கள் என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெயிலர்  பட ரிலீஸுக்கு அமெரிக்க ரஜினி ரசிகர்கள் நேற்று அவரது பேனருக்கு பால் அபிஷேகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓலைச்சுவடி படிக்கும் தஞ்சை மணிமாறன்! - மன் கீ பாத்தில் புகழ்ந்து வாழ்த்திய பிரதமர் மோடி!

துணை முதலமைச்சர் பதவி! ஆசைக்காட்டினால் சென்று விடுவேனா? - திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. நிறைபுத்தரிசி பூஜை தேதியும் அறிவிப்பு..!

கல்லூரி மாணவர்கள் விடுதியில் 5000 கஞ்சா சாக்லேட்டுக்கள்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பள்ளி மாணவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்த பாடம்.. எந்தெந்த வகுப்புகளுக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments