மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இக்னேஷியஸ் டெலோஸ் ஃபுளோராவுக்கு இந்திய ராணுவம் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருந்தது.
இதனையடுத்துஇ நேற்று ஃபுளோராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததை அடுத்து, அந்த ட்வீட்டை இந்திய ராணுவம் நீக்கியது. இதற்கு திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில், தமிழ்நாடு முதலமைச்சர், தனது மாநிலத்திலிருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய பதிவை இந்திய ராணுவம் ஏன் நீக்க வேண்டும்? இதன் பின்னணி என்ன? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் இந்திய ராணுவம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. இந்த விளக்கத்தில் ராணுவ தலைமையகம் வாழ்த்து தெரிவிப்பதற்கு முன்னதாக வடக்கு மண்டலம் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்ததால், பதிவை நீக்கியதாக இந்திய ராணுவம் தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.
முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்து தனது ட்விட்டரில், பெண்களால் முன்னேறக் கூடும் - நம் வண்தமிழ் நாடும் எந்நாடும்! என்று பதிவு செய்திருந்தார்.