சசிகலாவை வச்சு செஞ்ச இந்தியா டுடே: செம்ம கலாய் வீடியோ!
சசிகலாவை வச்சு செஞ்ச இந்தியா டுடே: செம்ம கலாய் வீடியோ!
தமிழகத்தில் முதல்வர் பதவியை பிடிக்க சசிகலாவும், ஓபிஎஸும் மோதிக்கொண்ட காட்சிகளை ஒட்டு மொத்த நாடே பார்த்தது. குறிப்பாக கூவத்துர் சொகுசு விடுதியில் எம்எல்ஏக்களை சசிகலா தரப்பினர் அடைத்து வைத்ததை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியது.
இந்த விவகாரங்களை ஒளிபரப்ப தேசிய ஊடகங்களும் தவறவில்லை. தமிழ் சேனல்களுக்கு இணையாக இந்த விவகாரத்தில் தேசிய சேனல்களும் ஆர்வம் காட்டியது. இந்நிலையில் பிரபல தேசிய ஊடகமான இந்தியா டுடே இதனை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
நன்றி: India Today
இந்தியா டுடே அவ்வப்போது, அரசியலில் நடக்கும் நிகழ்வுகளை so sorry என்ற பெயரில் கார்டூன் படமாக வெளியிடும். அந்த வரிசையில், தற்போது, தமிழக அரசியலில் நிகழ்ந்த சசிகலா, பன்னீர்செல்வம் இடையேயானா நிகழ்வுகளை so sorry என்ற தலைப்பில் கார்டூன் படமாக வெளியிட்டுள்ளது.
அதில் சசிகலாவை தாறுமாறாக கலாய்த்துள்ளது இந்தியா டுடே ஊடகம். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.