Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

Mahendran
சனி, 10 மே 2025 (14:57 IST)
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் மிகுந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு மருந்துகள் மற்றும் மருந்து தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் ஏற்றுமதியை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 
இதனையடுத்து, தமிழக மருந்து உற்பத்தியாளர்கள் பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கையை நிறுத்தியுள்ளனர். தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மருந்து நிறுவனங்களின் சங்கத் தலைவர் டாக்டர் ஜெயசீலன் இதை உறுதி செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
“இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு ஜெனரிக் மருந்துகள் மற்றும் அதற்கான மூலப்பொருட்கள் பெரிதளவில் அனுப்பப்படுகின்றன. ஆண்டுக்கு சுமார் ரூ.2.40 லட்சம் கோடி மதிப்புள்ள மருந்துகள் உலகமெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதில், தமிழகத்திலிருந்து மட்டும் ரூ.8,000 கோடி முதல் ரூ.10,000 கோடி மதிப்பில் மருந்துகள் அனுப்பப்படுகின்றன.
 
பாகிஸ்தானுக்கு அனுப்பப்படும் உயிருக்கு பயனுள்ள மருந்துகளுக்கான மூலப்பொருட்களின் மதிப்பு மட்டும் ரூ.100 கோடி இருக்கலாம். நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்வதை நிறுத்தியுள்ளோம். ஆனால் அதே நேரத்தில் மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதியில் எந்த தடையும் இல்லை.
 
மேலும், அமெரிக்கா போன்ற நாடுகள் தற்போது அதிக அளவில் மருந்துகள் அனுப்புமாறு முன்பே ஆர்டர்கள் வழங்கியுள்ளன. சீனாவிலிருந்து வரும் மூலப்பொருள் இறக்குமதியிலும் எந்த  பிரச்சனையும் இல்லை. எனவே, நாட்டிற்குள் மருந்து பற்றாக்குறை ஏற்படாது” எனத் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

இந்தியா தாக்குதலை நிறுத்தினால், நாங்களும் நிறுத்த தயார்: பாகிஸ்தான் அமைச்சர்..!

பயங்கரவாதிகள் முகாம்கள் தரைமட்டம்: இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ..!

இந்திய பெண் விமானி சிறைபிடிக்கப்பட்டாரா? மத்திய அரசு விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments