Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

Mahendran
சனி, 10 மே 2025 (14:52 IST)
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி  இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக, இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் நிலைமைகள் மிகுந்த பதற்றமானதாக மாறியுள்ளன.
 
இந்தியா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த மூன்று நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை பகுதிகளை தொடர்ந்து தாக்கி வருகிறது. இந்திய ராணுவமும் அதற்கேற்ப பதிலடி நடத்தி வருகிறது.
 
நேற்று, பாகிஸ்தான் ஒருசேர பல மாநிலங்களை குறிப்பாக காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தை குறிவைத்து தாக்கியது. இந்த பெருந்தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.
 
மேலும், பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திப்புரா, ஜம்மு ஆகிய இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களை நடத்த முயன்றது. ஆனால், இந்த ட்ரோன்கள் எல்லாம் இந்திய வான்வழி பாதுகாப்பு அமைப்பால் வானிலேயே தடுத்து அழிக்கப்பட்டன என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
 
இதேபோல், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை நோக்கியும், ஜம்மு விமான நிலையத்தையும் குறிவைத்து தற்கொலை ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இந்த ட்ரோன்களையும் இந்திய வான்படை வீரர்கள் முற்றிலும் அழித்து விட்டனர். இதில் இருந்து பாகிஸ்தானை இந்தியா லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்கிறது என்பது தெரிய வருகிறது.
 
இந்தத் தாக்குதல்கள் தொடர்வதால், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடிய தவெக.. பிரச்சார பேருந்துக்கு பூஜை..!

நெட்ஃபிளிக்ஸை கேன்சல் செய்யுங்கள்: எலான் மஸ்க் பதிவு செய்த கருத்தால் பரபரப்பு..!

கேரளப் பள்ளிகளில் 1,157 கட்டிடங்கள் ‘பயன்பாட்டிற்கு உகந்ததல்ல’: ஜூம்பா நடனமும் எதிர்ப்பும்

அடுத்த கட்டுரையில்
Show comments