Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து: கமல்ஹாசன்

Webdunia
திங்கள், 13 மே 2019 (06:43 IST)
நாத்திகவாதிகள் கிட்டத்தட்ட அனைவருமே இந்துக்களுக்கு எதிரியாகவும், மற்ற மதத்தினர்களுக்கு ஆதரவாளர்களாகவும் இருப்பது வழக்கமான ஒன்றே. அதில் கமல்ஹாசனும் விதிவிலக்கல்ல என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் நேற்று அவர் பேசியுள்ளதில் இருந்து தெரிகிறது.
 
நேற்று அவர் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசியபோது, 'தீவிரவாதம் இருதரப்பிலும் உள்ளது. உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள். மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியுள்ளார்.
 
மேலும் இந்தியாவை பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற வேண்டும் என்றும், தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 
உண்மையான முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள் என்பது உண்மைதான். அதில் சந்தேகமே இல்லை, அதே போல் உண்மையான இந்து உள்பட எந்த மதத்தினர்களும் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள் என்று ஏன் கமல் சொல்லவில்லை என்பதே பலருடைய கேள்வியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் கட்சிக்கு அழைப்பில்லை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு எதிராக ஐகோர்ட்டில் மனு..!

சாலை விபத்தில் படுகாயம் .. தலையில் கட்டுடன் தேர்வு எழுத வந்த பிளஸ் 2 மாணவி..!

பேரிடர் மையம், மீன்பிடி இறங்கு தளம் etc.,!? நாகை மக்களுக்கு திட்டங்களை அள்ளி வழங்கிய முதல்வர்!

எகிறிய கடன்! நடிகர் திலகம் சிவாஜியின் வீடு ஜப்தி! - நீதிமன்றம் உத்தரவு!

ரெண்டு தரப்பும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க! சீமானை விசாரிக்க இடைக்கால தடை! - உச்சநீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments