இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுடனான நட்பு வலுவாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த உலகில் அமெரிக்காவுக்கு இணையான அளவு அனைத்திலும் வல்லரசுமிக்க நாடு ரஷ்யா. உலகில் மிகப்பெரிய நாடான ரஷ்யாவின் தற்போதைய அதிபர் புதின் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இன்று பிரதமர் மோடியைச் சந்தித்த அவர், இந்தியா- ரஷ்யா இடையேயான அட்பு நிலையானது மற்றும் நம்பமானது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா- ரஷ்யா இடையேயான உறவுகளின் வளர்ச்சியில் எந்த மாற்றமும் இல்லை சமீபகாலமாக உலகில் கொரொனா தொற்று பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும் இரு நாடுகளில் உறவு வலுவாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.