பஹல்காம் தாக்குதலுக்கு பதிலாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' எனும் நடவடிக்கையை பாகிஸ்தான் மீது மேற்கொண்டு வருகிறது. இதனால் இரு நாடுகளின் எல்லையில் சிக்கலான நிலை உருவாகியுள்ளது.
மேலும் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 3 நாட்களாக இந்திய எல்லைகளை அடிக்கடி தாக்கி வருகிறது, அதற்கு இந்திய ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
நேற்றிரவு முதல் பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதல்களில் அரசு அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்திய ராணுவம் பாகிஸ்தான் தாக்குதல்களை முறியடித்து வந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கிடையே பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்திய விமானி ஷிவானி சிங் பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்டதாக வெளியான செய்தியை மத்திய அரசு மறுத்துள்ளது. பாகிஸ்தான் ஊடகங்கள் ஷிவானி சிங் சிறையில் இருப்பதாக் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் இந்த செய்தி முழுக்க முழுக்க பொய்யானது என இந்தியா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.