2021ம் ஆண்டில் அதிகமாக மக்கள் மகிழ்ச்சியுடன் பணிபுரியும் நாடுகள் குறித்த தரவரிசையை எக்ஸ்பார் இன்சைடர் அமைப்பு வெளியிட்டுள்ளது.
தனியார் சர்வே அமைப்பான எக்ஸ்பாட் இன்சைடர் ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் அதிக மக்கள் மகிழ்ச்சியோடு பணிபுரியும் நாடுகள் குறித்த சர்வே முடிவுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டிற்கான தரவரிசை வெளியாகியுள்ளது.
அதில் மக்கள் அதிக மகிழ்ச்சியோடு பணிபுரியும் நாடாக முதல் இடத்தில் தைவான் உள்ளது. இரண்டாவது இடத்தில் மெக்ஸிகோவும், மூன்றாவது இடத்தில் கோஸ்டாரிகா தீவும் உள்ளது.
அதுபோல கடைசி மூன்று இடங்களில் குவைத், இத்தாலி, தென் ஆப்பிரிக்கா நாடுகள் உள்ளன. மகிழ்ச்சியாக மக்கள் வேலை செய்யும் நாடுகள் தரவரிசையில் இந்தியா கடைசி 10 நாடுகளுக்குள் உள்ளது. மொத்தமாக 59 நாடுகள் கொண்ட தரவரிசையில் இந்தியா 51வது இடத்தில் உள்ளது.