Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை: திருப்பூரில் அதிர்ச்சி

Advertiesment
கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை: திருப்பூரில் அதிர்ச்சி
, வெள்ளி, 3 ஜூன் 2016 (15:01 IST)
கடன் தொல்லை காரணமாக திருப்பூர் மாவட்டம் கணபதிபாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


 
 
கணபதிபாளையம் அருகே பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகின்றார் தாமரைக்கண்ணன் என்பவர். இவர் அந்த நிறுவனத்தின் 3-வது தளத்திலேயே குடியிருந்து வந்தார்.
 
45 வயதான தாமரைக்கண்ணனை, அவரது தந்தை இன்று காலை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். நீண்ட நேரமாகியும் செல்போனை யாரும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அருகில் உள்ளவர்கள் வீட்டின் கதவை உடைத்து பார்த்போது, தாமரைக்கண்ணன் அவரது மனைவி மற்றும் அவரது இரு மகன்கள் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்தனர்.
 
அவர்கள் வாயில் டேப் ஒட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கினார்கள். இவர்கள் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
வாயில் டேப் ஒட்டப்பட்ட நிலையில் அவர்கள் தூக்கில் தொங்கியதால் இது கொலையாக கூட இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு பள்ளியில் ஒரு மாணவனுக்கு இரண்டு ஆசிரியர்கள்