Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கையில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை உயர்வு

இலங்கையில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை  உயர்வு
, வியாழன், 19 ஜனவரி 2023 (22:56 IST)
கடந்தாண்டு இலங்கை நாடு பொருளாதார  நெருக்கடியில் சிக்கியது. இதனால், பெட்ரோல், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் விண்ணைமுட்டும் அளவு விலை உயர்ந்தன.
 
இந்த நிலையில், அங்கு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சி மாற்றத்திற்குப் பின், தற்போது ரணில் விக்ரமசிங்கே அரசின் ஜனாதிபதியாகப் பொறுப்பு வகிக்கிறார்.
 
உலகின் முக்கிய சுற்றுலாத்துறை நாடான இலங்கையில்  கடந்த 2022 ஆம் ஆண்டு 7.2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது கொரொனா காலகட்டத்தில் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகளைவிட 3 மடங்கு அதிகம் ஆகும்.
 
இதனால், மீண்டும் அங்கு பொருளாதார வளர்ச்சி ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்துப் பெண்ணிடம் பேசிய முஸ்லிம் மாணவன் மீது தாக்குதல்