Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு..! முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.!!

Paddy

Senthil Velan

, புதன், 26 ஜூன் 2024 (20:31 IST)
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105 ஊக்கத் தொகை கூடுதலாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நெல் உற்பத்தியினைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வை வளப்படுத்தி அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு, 2024-25ம் ஆண்டு காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு 105 ரூபாயும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 130 ரூபாயும் கூடுதல் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
 
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்,விவசாயிகளிடமிருந்து சாதாரண நெல் குவிண்டால் ஒன்று 2,405 ரூபாய்க்கும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்று 2,450 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படும். இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகை வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். 


அத்துடன், தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு, அடுத்து வரும் 2025-26 நிதியாண்டில், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என்ற வீதத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்டை கண்டித்து உண்ணாவிரதம்.. காவல்துறை அனுமதி..!