கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் அலுவலகத்தில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவையில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். கட்சியின் நிதி வசூல், கணக்கு உள்ளிட்ட ஆவணங்களை வருமானவரித் துறையினர் ஆய்வு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அங்கு உள்ள கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களையும் ஆய்வு செய்த அதிகாரிகள் வெளிநாடுகளிலிருந்து நிதி பரிமாற்றம் செய்யப்பட்டதா? என்றும் கட்சியினர்களை வருமானவரித் துறையினர் விசாரித்துதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வருமான வரித்துறையினர் சோதனை செய்வதாக தகவல் கிடைத்தவுடன் எஸ்டிபிஐ கட்சியினர் அலுவலகத்தின் முன் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் எஸ்டிபிஐ கட்சியினர் கட்சியின் நிர்வாகிகள் வருமானவரித்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வர வேண்டும் என அதிகாரிகள் சம்மன் கொடுத்து விட்டு சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.