Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் இன்று 20 இடங்களில் ஐடி ரெய்டு.. பரபரப்பு தகவல்..!

Advertiesment
income tax raid
, புதன், 18 அக்டோபர் 2023 (09:50 IST)
சென்னையில் இன்று அதிகாலை முதல் 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனங்களிலும் வேப்பேரி, பூக்கடை , வில்லிவாக்கம், மாதவரம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அதேபோல் சென்னை சவுகார்பேட்டை முத்தையா முதலில் தெருவில் இருக்கும் தொழில் அதிபர் ஒருவர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அவருக்கு சொந்தமான குடோனில் சோதனை நடந்து வருகிறது.

மேலும் தாம்பரம், குன்றத்தூர், எழும்பூர், மண்ணடி,  ஆயிரம் விளக்கு ஆகிய பகுதிகளில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

சென்னையில் உள்ள ஸ்டீல் தயாரிப்பு நிறுவனங்கள், அந்த நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமானவரி சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனைக்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் ஏதாவது உண்டா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ட்விட்டரை பயன்படுத்த விரைவில் கட்டாய கட்டணம்.. அக்டோபர் 17 தேதி முதல் சோதனை