Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடக்க இது தான் காரணமாம்: தளவாய் சுந்தரம் கண்டுபிடிப்பு!

விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடக்க இது தான் காரணமாம்: தளவாய் சுந்தரம் கண்டுபிடிப்பு!

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (11:49 IST)
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உட்பட 30-க்கும் மேற்பட்ட இடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 6.30 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.


 
 
ஆர்கே நகர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனையில் ஆர்கே நகரில் கோடிக்கணக்கான பணம் பட்டுவாட செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இந்த சோதனை குறித்து அதிமுகவின் சசிகலா அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் டெல்லியின் தமிழக சிறப்பு பிரதிநிதியான தளவாய் சுந்தரம் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் இது அரசியல் காரணங்களுக்கா நடத்தப்படுகிற சோதனையென குற்றம் சாட்டினார்.
 
மேலும் ஆர்கே நகர் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெறப்போவது உறுதி என்பது தெரிந்துவிட்டது. இந்த தேர்தல் பணியில் அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்பாக பணியாற்றி வருகிறார், இதனை தடுக்கவே தேர்தல் ஆணையத்தின் மூலம் இந்த சோதனையை நடத்துவதாக தளவாய் சுந்தரம் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments