Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவில்லையா? ஆடிட்டருக்கு பதில் ஆசிரியர் வீட்டில் நுழைந்த வருமான வரித்துறையினர்

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2017 (16:11 IST)
சசிகலா மற்றும் அவரது உறவினர் வீடுகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறையினர் ஆடிட்டர் வீட்டிற்கு பதில் ஆசிரியர் வீட்டில் நுழைந்து சோதனை நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.


 

 
வருமான வரித்துறையினர் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். சசிகலாவுக்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். 
 
இந்த வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நேற்று வரை வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடலூரில் உள்ள ஆடிட்டர் ஒருவர் வீட்டில் சோதனை செய்வதற்கு பதில் ஆசிரியர் வீட்டில் சோதனை நடத்திய சம்பவம் தெரியவந்துள்ளது.
 
ஆசிரியர் ஒருவர் வீட்டில் சம்பந்தம் இல்லாமல் நுழைந்த வருமான வரித்துறையினர் அவரை வங்கி வங்கியாக அழைத்து சென்று விசாரித்துள்ளனர். மாலை சென்னையில் இருந்து தகவல் வந்ததும் தாங்கள் வீடு மாறி வந்து விட்டோம், மன்னித்து விடுங்கள் என கூறி பின்னர் ஆடிட்டர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments