Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வருமானவரி தாக்கல் செய்யாவிட்டால் அபராதம்! – வருமானவரி துறை எச்சரிக்கை!

Advertiesment
income tax
, திங்கள், 18 ஜூலை 2022 (10:30 IST)
2021 – 2022ம் ஆண்டிற்கான வருமானவரி தாக்கல் செய்யாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என வருமானவரித்துறை எச்சரித்துள்ளது.

2021 – 2022ம் நிதியாண்டிற்கு வருமானவரி செலுத்துவதற்கான அவகாசம் ஏப்ரல் மாதம் தொடங்கியது. அதுமுதலாக வரி செலுத்துபவர்களை வருமானவரி தாக்கல் செய்யுமாறு வருமானவரித்துறை அறிவுறுத்தி வருகிறது.

ஆண்டுக்கு ரூ.2.5 லட்ச ரூபாய்க்கு அதிகமாக வருமானம் பெறும் அனைவரும் வருமானவரி தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில் வருமானவரி தாக்கலை அபராதமின்றி செய்ய இந்த மாதம் 31ம் தேதி கடைசி தேதியாக அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்திற்கு பின் வருமானவரி தாக்கல் செய்பவர்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்குள் வருவாய் ஈட்டுவோராக இருந்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். ரூ.5 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுவோராக இருந்தால் டிசம்பர் வரை ரூ.5 ஆயிரம் அபராதமும், ஜனவரியிலிருந்து மார்ச் மாதத்திற்குள் செலுத்தினார் ரூ.10 ஆயிரமும் அபராதமாக வசூலிக்கப்படும். 2023மார்ச் மாதத்திற்கு பிறகு வருமானவரி தாக்கல் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று மீண்டும் உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!