Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஓடத்தொடங்கியது பேருந்துகள்: மக்கள் மகிழ்ச்சி

Advertiesment
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஓடத்தொடங்கியது பேருந்துகள்: மக்கள் மகிழ்ச்சி
, திங்கள், 21 ஜூன் 2021 (07:19 IST)
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஓடத்தொடங்கியது பேருந்துகள்: மக்கள் மகிழ்ச்சி
இன்று முதல் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயங்கும் என நேற்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் பேருந்துகள் ஓடத் தொடங்கின 
 
இன்று காலை 6 மணிக்கு பேருந்து பணிமனைகளில் இருந்து பேருந்துகள் ஓட தொடங்கியது என்றும் பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னையில் மட்டும் ஆயிரத்து 400 பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மேலும் இன்று முதல் பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் பேருந்துகள் ஓட தொடங்கியுள்ளதை அடுத்து சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பி விட்டதாக கருதப்படுகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

17.92 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!