Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை.. அரசாணை வெளியீடு!

Advertiesment
assembly

Mahendran

, சனி, 11 ஜனவரி 2025 (08:31 IST)
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ₹625 ஊக்கத் தொகையாக வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் 151முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு ₹195-ம், 91 முதல் 151 நாட்கள் வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு ₹85 ஊக்கத்தொகையாக வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆணையில் கூறியிருப்பதாவது:
 
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நற்பணியினை கருத்திற்கொண்டும், உற்பத்தி திறன் அதிகரிப்பு மற்றும் தொழில் அமைதி ஆகியவற்றில் ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், அரசு போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்களுக்கு குறிப்பிட்டதொரு தொகையை சாதனை ஊக்கத்தொகையாக வழங்கப்படுகின்றது.
 
அவ்வாறே 2024-ஆம் ஆண்டிற்கான சாதனை ஊக்கத்தொகை (Performance Incentive) அரசு போக்குவரத்து கழகங்கங்கள். தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் அரசு போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்களுக்கு கீழ்கண்டவாறு வழங்க அரசு இதன் வழி ஆணையிடுகிறது.
 
அ) 2024-ம் ஆண்டில் 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625/- 
 
ஆ) 2024-ம் ஆண்டில் 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 200 நாட்களுக்குக் குறைவாகவும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.195/-
 
இ)2024-ம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கு குறைவாகவும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.85/- 
 
ஈ)   2024-ம் ஆண்டில் 90 நாட்கள் மற்றும் அதற்குக் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு இல்லை.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அறிவிப்பு.. காங்கிரஸ் அதிருப்தியா?