Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் மாற்றுக்கட்சி நிர்வாகிகள் ஒரே நாளில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க வில் இணைந்தனர்.

Webdunia
வெள்ளி, 22 மே 2020 (22:39 IST)
கரூரில் மாற்றுக்கட்சி நிர்வாகிகள் ஒரே நாளில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க வில் இணைந்தனர். காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் அமமுக நிர்வாகிகள் என்று ஏராளமானோர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் இணைந்தனர்.

கரூர் மாவட்ட அ.தி.மு.க கழக செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில், கரூர் ஒருங்கிணைந்த நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் செளந்தர்ராஜன், கரூர் காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் அர்ஜுனன், கரூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்பபிரிவு நிர்வாகி சுரேஷ்குமார் சுமார் 30 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், கரூர் நகர மத்திய அ.தி.மு.க கழக செயலாளர் வை.நெடுஞ்செழியன் தலைமையில் அ.தி.மு.க கட்சியில் இணைந்தார்.

இதே போல, கரூர் வடக்கு நகர அ.தி.மு.க செயலாளர் பாண்டியன் தலைமையில், ராமனுஜம் நகர் 3 வது வார்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க வில் இணைந்தனர். இதே போல, அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ.கலையரசன் முன்னிலையில், அப்பகுதியினை சார்ந்த சுமார் 25 க்கும் மேற்பட்ட தி.மு.க நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க வில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் இணைந்தனர். இதே போல, கரூர் மாவட்ட அளவில் பல்வேறு கட்சிகளில் இருந்து இன்று மாலை ஒரே நாளில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க வில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் இணைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments