தாய்- மகன் உடல் கருகி பலி: கள்ளக்குறிச்சியில் சோகம்

Webdunia
புதன், 14 மார்ச் 2018 (13:28 IST)
கள்ளக்குறிச்சியில் தாயும், 6 மாத குழந்தையும் உடல் கருகி பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கனகா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளது.
 
சரவணன் மாற்றுதிறனாளி என்பதால் தனது பெற்றோர்களுக்கு வரும் பென்சன் பணத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார். 
 
நேற்று வழக்கம் போல சரவணனும் அவரது மகளும் வீட்டின் பின் பகுதியில் உள்ள அறையில் தூங்கினர். கனகாவும் அவரது 6 மாத ஆண் குழந்தையும் வீட்டின் முன் அறையில் தூங்கினர். அப்போது நள்ளிரவு தீடீரென வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கனகாவும், 6 மாத குழந்தையும் உடல் கருகி பலியானார்கள். சரவணன் அவரது பெண் குழந்தையுடன் வீட்டின் பின் அறையில் இருந்ததால் உயிர் தப்பினர்.
 
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீ விபத்து தற்செயலாக நடந்ததா? அல்லது பழிவாங்கும் காரணமாக நடந்ததா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments