Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் ஒரே நாளில் 7 பெண்கள் மாயம்

Advertiesment
சென்னையில் ஒரே நாளில் 7 பெண்கள் மாயம்
, வியாழன், 26 ஏப்ரல் 2018 (10:33 IST)
சென்னையில் ஒரே நாளில் ஏழு பெண்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் பிரச்சனைகளுக்கு குறைவின்றி இயங்கிக்கொண்டிருக்கிறது. காவிரி பிரச்சனை, ஸ்டெர்லைட் பிரச்சனை, அடுத்தடுத்து அரசியலில் குதிக்கும் நடிகர்களின் பிரச்சனை, ஆளுங்க்கட்சி பிரச்சனை, எதிர்கட்சிப் பிரச்சனை என பிரச்சனைகளுக்கு பஞ்சமின்றி உள்ளது. மேலும் தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தலைதூக்கி நிற்கின்றது.
 
இந்நிலையில் மாநிலத்தின் தலைநகரமான சென்னையில் ஒரே நாளில் ஏழு பெண்கள் காணாமல் போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரோம்பேட்டையை சேர்ந்த விநோதினி, சிட்லபாக்கத்தை சேர்ந்த நீலாதேவி (25), திருவள்ளூர் மாவட்டம் கரிகலவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி (18) வெள்ளக்காடு சிவரஞ்சனி (16), புல்லரம்பாக்கம் கலைவாணி (20), ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த வர்ஷா (20) ஆகியோர் வெளியே சென்று வீடு திரும்பவில்லை என அவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
webdunia
புகாரின் பேரில் போலீஸார் காணாமல் போன பெண்களை தீவிரமாக தேடி வருகின்றனர். ஒரே நாளில் ஏழு பெண்கள் காணாமல் போயிருப்பது சென்னைவாசிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரனின் முதல்வர் ஆசையே எல்லாவற்றுக்கும் காரணம் - போட்டுக் தாக்கும் திவாகரன்