Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டால்...இழப்பீடு குறித்து ஆலோசனை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

Advertiesment
படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டால்...இழப்பீடு குறித்து ஆலோசனை - அமைச்சர் கடம்பூர்  ராஜூ
, வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (16:47 IST)
படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டால்...இழப்பீடு குறித்து ஆலோசனை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஷங்கர் இயக்கி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படிப்பிடிப்பில் நேர்ந்துள்ள கோர விபத்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டில் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பிற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென கிரேன் அறுந்து விழுந்தது.
 
இதில் இயக்குனர் ஷங்கரின் துணை இயக்குனர் கிருஷ்ணா, ஷங்கரின் பிஏ மது, ஆர்ட் அசிஸ்டண்ட் சந்திரன் என மூன்று இறந்துவிட்டனர். 10 பேர் காயம் படுகாயம் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் தமிழ் திரையுலகமே கருப்பு தினமாக மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, ஷங்கர், கமல்ஹாசன் தலா ஒரு கோடி ரூபாய்  தருவதாக கூறியுள்ளனர். இதுகுறித்த விசாரணையை மத்திய குற்றபிரிவு போலீஸார் இயக்குநர் ஷங்கர்,தயாரிப்பு நிறுவனமான லைகாவின் மேலாலர் ஆகியோரிடம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு தரவும் ஆலோசனை செய்து வருகிறோம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 
இத்குறித்து அவர் கூறியுள்ளதாவது, எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், அரசுக்கு தெரியாமல் படப்பிடிப்பு நடத்துவதால்தான் விபத்துகள் ஏற்படுகின்றன. படப்பிடிப்பு தளத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் உறுதித்தன்மை குறித்து அரசு ஆய்வு செய்யும் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு! – ஒத்துக்கொள்வாரா தாக்கரே?