Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமைச்சர் காமராஜ் வீட்டில் திடீர் ஐ.டி ரெய்டு

Advertiesment
அமைச்சர் காமராஜ் வீட்டில் திடீர் ஐ.டி ரெய்டு
, திங்கள், 15 அக்டோபர் 2018 (15:42 IST)
உணவுத்துறை அமைச்சர் காமராஜின் உறவினர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர் .
தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜின் உறவினரான மனோகரன் என்பவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சேரங்குளத்தில் உள்ள மனோகரனுக்குச் சொந்தமான வீடு, அலுவலகம், பெட்ரோல் பங்க், கல்குவாரி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 
 
ஆனால், இதுவரையில் வருமான வரித்துறையினர் எந்தவித ஆவணங்களையும் மனோகரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவரவில்லை. இது தொடர்பான முழுமையான விபரங்கள் இன்று மாலை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
மனோகர், இதற்கு முன்பு கூட்டுறவு சங்கதலைவராக இருந்துள்ளார். மேலும், கடந்த 10ஆண்டுகளாக அரசு ஒப்பந்ததாரராக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
முதல்வர் பழனிசாமி மீது டெண்டர் ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு உள்ள நிலையில், அமைச்சரின் உறவினர் வீட்டில் ஐடி ரெய்டு நடந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னை காதலிப்பதாக கூறினார் - வைரமுத்து மற்றொரு பெண்ணும் புகார்