Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டவிரோத கல்குவாரி.. தட்டிக் கேட்டவர் லாரி ஏற்றிப் படுகொலை! - அண்ணாமலை விடுத்த எச்சரிக்கை!

Prasanth Karthick
திங்கள், 20 ஜனவரி 2025 (10:07 IST)

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத கல்குவாரி செயல்பாட்டை தட்டிக்கேட்ட சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய்ள்ளது.

 

 

ஜெகபர் அலி கொலை வழக்கில் லாரி ஏற்றிக் கொன்ற டிரைவர், லாரி உரிமையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை “புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்த, மாவட்ட அமெச்சூர் கபடி கழகச் செயலாளரும், சிறந்த சமூக ஆர்வலருமான திரு. ஜெகபர் அலி அவர்கள், கனிம வளக் கொள்ளையர்களால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில், மோடி கபடி லீக் போட்டிகள் சிறப்பாக நடைபெற, முக்கிய பங்காற்றியவர் திரு. ஜெகபர் அலி அவர்கள். இயற்கை வளப்பாதுகாப்பு, கனிமவளங்களின் கொள்ளையைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு தளங்களில் அக்கறையுடன் செயல்பட்டவர்.

 

கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் பலி கொடுத்திருக்கிறார்கள். 

 

இயற்கை வளங்களைக் காக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் பாடுபட்டவர் உயிரை எடுக்குமளவுக்கு, தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கும், கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் எனக் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க முயன்றவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால், ஆட்சிக்கு வந்த பத்தாவது நிமிடத்தில் மணல் கொள்ளைக்குச் செல்லலாம் என்று கூறியே ஆட்சிக்கு வந்த திமுக கொடுத்த தைரியம் இன்றி வேறென்ன? 

 

கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. திரு. ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை மடைமாற்றலாம் என்ற எண்ணம் இருந்தால், மிக மோசமான விளைவை திமுக அரசு எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

 

மேலும் இறப்பதற்கு முன்பு ஜெகபர் அலி வெளியிட்ட வீடியோவையும் அண்ணாமலை அந்த பதிவுடன் ஷேர் செய்துள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போர் நிறுத்த ஒப்பந்தம்; 90 பாலஸ்தீனியர்களை விடுவித்த இஸ்ரேல்! காசா வீதிகளில் கொண்டாட்டம்!

அம்பேத்கர் மண்டபத்தில் அனுமதியில்லை.. மண்டபத்தில் மக்களை சந்திக்கும் தவெக தலைவர் விஜய்! போலீஸ் கெடுபிடி!

ஒரே நேர்கோட்டில் 7 கோள்கள்.. நாளை வானில் நடக்கும் அதிசயம்..!

அமெரிக்காவில் மீண்டும் டிக்டாக் செயலி.. ஒரே நாளில் நடந்த மாற்றம்..!

இன்று 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments