Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரவு 10.30 மணிக்கு தீக்குளிப்பேன் : சொன்னபடி செய்த சிறுவன் பலி: சென்னையில் அதிர்ச்சி

இரவு 10.30 மணிக்கு தீக்குளிப்பேன் : சொன்னபடி செய்த சிறுவன் பலி: சென்னையில் அதிர்ச்சி

இரவு 10.30 மணிக்கு தீக்குளிப்பேன் : சொன்னபடி செய்த சிறுவன் பலி: சென்னையில் அதிர்ச்சி
, வியாழன், 8 செப்டம்பர் 2016 (14:43 IST)
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் தனக்கு தானே தீ வைத்து பலியான சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சென்னை மதுரைவாயல் பகுதியில் வசித்து வருபவர் தனலட்சுமி. இவரின் சகோதரி மதுரையில் வசித்து வருகிறார். அவரின் மகன் சத்ய பாஸ்கர்(12) சற்று குணாதிசய குறைபாடு உடையவன் என்று கூறப்படுகிறது. அதனால் அச்சிறுவனுக்கு படிப்பும் ஏறவில்லை.

எனவே, அச்சிறுவனை தனலட்சுமி சென்னைக்கு அழைத்து தன்னுடைய வீட்டில் வைத்திருந்தார். அவ்வப்போது ஏடாகூடமாக எதையாவது செய்வது, பேசுவது என்று இருந்துள்ளான் சத்ய பாஸ்கர்.

அவனின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவனின் சகோதர்கள் இருவரும் மதுரையில் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு தனது சித்தியுடன் பேசிக் கொண்டிருந்த அச்சிறுவன், இன்று இரவு சரியாக 10.30 மணிக்கு நான் தீக்குளிக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார். எப்போதும் போல் அவன் விளையாட்டாக பேசுகிறான் என்று அவனது சித்தி தனலட்சுமி அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், மொட்டை மாடிக்கு சென்ற சிறுவன், சரியாக 10.30 மணியளவில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டான். அவனின் அலறல் சத்தம் கேட்டு, ஓடிச்சென்று பார்த்துள்ளார் தனலட்சுமி.

சிறுவனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், சிகிச்சை பலனின்றி பாஸ்கர் பரிதாபமாக மரணமடைந்தான்.

இந்த சம்பவம் அச்சிறுவனின் குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதற்கெல்லாமா கொலை செய்வாங்க! பெண்ணிற்கு நடந்த கொடூரம்!