ஜவ்வாய் இழுக்காமல் சப்புனு முடிந்த அதிமுக - பாஜக டீலிங்?

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (19:04 IST)
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என இழுத்து அடிக்காமல் இப்போதே சொல்லிவிட்டார் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்.
 
கடந்த மூண்றாண்டுகளாக நடைபெறாமல் இருந்த தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. எனவே தமிழக அரசியல் கட்சிகள், அதன் கூட்டணி கட்சிகள் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
 
கடந்த இடைத்தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி தொடருமா தொடராதா என கூறாமல் பாஜக இழுத்தடித்து வந்த நிலையில் இம்முறை உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். 
 
அதேபோல, உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் டிச.16 முதல் விருப்பமனு விநியோகம் செய்யப்படும் எனவும், டிசம்பர் முதல் வாரத்தில் பாஜக மாநில தலைவர் தேர்தல் இருக்கும் எனவும் அறிவித்துள்ளார். 
 
புதிய தமிழக பாஜக தலைவர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், பாஜக இளைஞர் அணி தேசிய துணை தலைவர் ஏ.பி. முருகானந்தம், வானதி சீனிவாசன், கே.டி. ராகவன், எஸ்.வி.சேகர் ஆகியோர் பெயர்கள் பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments