Publish Date: Thu, 14 Nov 2019 (12:11 IST)
Updated Date: Thu, 14 Nov 2019 (12:14 IST)
சென்னை ஐஐடியில் கடந்த 9 ஆம் தேதி, பாத்திமா என்ற மாணவி துக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல் ஆணையர் விசாரணை.
கடந்த 9 ஆம் தேதி, ஐஐடியில் கேரளாவை சேர்ந்த முதலாமாண்டு மாணவி பாத்திமா விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார். பேராசிரியரின் தொடர் தொல்லையால் மனவிரக்தி அடைந்து தற்கொலை செய்துகொண்டார்.
மாணவி பாத்திமாவின் பெற்றோர் தற்கொலையை குறித்து தீவிர விசாரணை நடத்துமாறு கோரிக்கை வைத்துள்ள நிலையில், இந்த வழக்கில் சந்தேகிக்கப்பட்ட 11 பேராசிரியர்களிடம் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாத் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் பாத்திமா வழக்கு குறித்த விசாரணையை தீவிரப்படுத்துமாறு சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.