Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தினகரனை நம்பி போனால் நடுத்தெருவில் நிற்க வேண்டும் - முதல்வர் விமர்சனம்

தினகரனை நம்பி போனால் நடுத்தெருவில் நிற்க வேண்டும் - முதல்வர் விமர்சனம்
, செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (21:22 IST)
சசிகலாவுக்கு வரவேற்பு அளித்து கார் வழங்கியவர்கள் 7 பேர்  அதிமுக கட்சியிலிருந்து நேற்று அதிரடியாக நீக்கப்பட்ட  நிலையில், இன்று முதல்வர்  பழனிசாமி டிடிவி.தினகரனை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27 ஆம் தேதி விடுதலை ஆன நிலையில் நேற்று அவர் பெங்களூரில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்துகொண்டிருந்த காரில் அதிமுக கொடி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவிற்கு உதவிய எட்டப்பர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இந்நிலையில் நேற்று இரவில் ஜெயலலிதாவின் தோழி சசிசலாவுக்கு  கார் வழங்கிய அதிமுக நிர்வாகிகள் 7 பேர் அக்கட்சியிலிருந்து தற்போது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
அதில், சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் எஸ்.ஆர். சம்மங்கி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், சசிகலாவுக்கு கட்சிக் கொடியுடன் கார் வழங்கியவர்  வரவேற்பு அளித்தவர்கள் என மொத்தமாக 7 பேர் அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன், அதிமுகவில் ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாகத் தெரிவித்தார். நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா, அன்புக்கு நான் அடிமை; அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன்; விரைவில் எல்லோரையும் சந்திக்கிறேன்… அதிமுக, அமுமவின் பொது எதிரியை வீழ்த்துவதே எங்கள் லட்சியம் எனவும் தெரிவித்தார்.

தற்போது பரப்புரை மேற்கொண்டுவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தினகரனை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது : தினகரனை நம்பிப் போனால் நடுரோட்டில் தான் நிற்க வேண்டும். அவரை நம்பி போன 18 எம்.எல்.ஏக்கள் தற்போது நடுரோட்டில் நிற்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்!