Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மணல் கொள்ளையை தடுத்தால்...செந்தில்பாலாஜியின் பேச்சினால் பெரும் சர்ச்சை

மணல் கொள்ளையை தடுத்தால்...செந்தில்பாலாஜியின் பேச்சினால் பெரும் சர்ச்சை
, வியாழன், 18 மார்ச் 2021 (00:01 IST)
கரூரில் திமுக வேட்பாளரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜியின் பேச்சினால் பெரும் சர்ச்சை – ஆட்சிக்கு வந்த பின்னர் மணல் கொள்ளையை தடுத்தால் அதிகாரிகள் உயிரோடு இருக்க மாட்டார்கள் என்று பேசியதால் வெடிக்குது சர்ச்சை.

திமுக கட்சி என்றாலே பிரியாணி கடை முதல், பரோட்டோ கடை வரை வன்முறையும், ப்யூட்டி பார்லர் முதல் பெட்டி கடை வரை வன்முறை அதுவும் எதிர்கட்சியாக இருக்கும் போதே அரங்கேறி வரும் பட்சத்தில் தற்போது, வரக்கூடிய தேர்தலில் நிச்சயம் திமுக கட்சியும், திமுக கூட்டணியும் ஜெயித்து முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வந்து விடுவார் என்று ஆங்காங்கே திமுக எம்.எல்.ஏ க்கள் முதல் திமுக உள்ளாட்சி பிரமுகர்கள் வரையும், திமுக கட்சி பிரமுகர்களும் ஆங்காங்கே போலீஸாரையும், அரசு அதிகாரிகளையும் மிரட்டி வரும் பட்சத்தில், கரூர் மாவட்ட திமுக வும் பாரபட்சம் இல்லாமல், பற்றாக்குறைக்கு பேசி வருவதும் செயலில் இருப்பதும் இருந்து வருகின்றது,

இவருடன் அதிமுக வில் பயணித்து, பின்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் பயணித்ததோடு. அவரோடு திமுக வில் இணைந்த பிரமுகர்கள் தற்போது நாங்கள் ரவுடி கட்சியில் இணைந்து விட்டோம் என்றும், ஆகவே எங்களை பகைத்து கொள்ளாதீர்கள் என்று ஆங்காங்கே அதிகாரிகளை மிரட்டியதோடு, பைனான்ஸ் பிரமுகர்களையும் மிரட்டி வரும் நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் 12 ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே அதுவும் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் (அப்போதைய கலெக்டர்) மனு கொடுத்துவிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே இனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு அரவக்குறிச்சி எம்.எல்.ஏ வாகிய எனக்கு அழைப்பு வில்லை என்றால், இனி மாவட்ட ஆட்சிய வெளியே நடக்க முடியாது என்று கொலைமிரட்டல் விடுத்தார்.

ஆனால் அந்த சம்பவமே இன்னும் மறையாமல் உள்ள பட்சத்தில் கடந்த திங்கள் கிழமை வேட்புமனு தாக்கலுக்கு முன்னர் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், கரூர் திமுக வேட்பாளருமான செந்தில்பாலாஜி பிரச்சாரத்தில் பேசிய போது மே மாதம் மு.க.ஸ்டாலின் 11 மணி அளவில் முதல்வராக பொறுப்பேற்பார். அப்போது 11.05 மணியளவில் மணல் அள்ள, ஆற்றுக்கு எல்லோரும் செல்லலாம் என்றும், அதை எந்த எந்த அதிகாரிகளும் தடுக்க மாட்டார்கள் என்றும் தடுத்தால் அந்த அதிகாரிகள் இருக்க மாட்டார்கள் என்று பேசிய பேச்சும், அதை தொடர்ந்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசிய பேச்சும் அந்த வீடியோவில் திமுக நிர்வாகிகளே வாக்களிப்பீர் உதயசூரியன் என்கின்ற சின்னத்தில் வாக்களிப்பீர் என்ற பேனர் ஸ்லைடுகள் போட்டு அதில் அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் விட்டு வரும் சம்பவம் தமிழக அளவில் மட்டுமல்லாமல், இந்திய அளவில் அந்த வீடியோ மிகவும் பரபரப்பாக்கியுள்ளது. இது தற்போது திமுக கட்சிக்கு உச்சகட்ட பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காசு வாங்கிட்டு ஓட்டு போட்ட…தீர்ந்திடுமா வறுமை – பிரபுதேவா பாடல் வைரல்