திராவிட அரசியலாக இருந்தால் கமலுடன் இணைய மாட்டேன்: சீமான்

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (10:52 IST)
நடிகர் கமல்ஹாசன் நாளை கட்சி பெயரையும் கொள்கையையும் அறிவித்து கட்சிக்கொடியை மதுரையில் ஏற்றவுள்ள நிலையில் அவரை கடந்த சில நாட்களாக பல்வேறு பிரபலங்கள் சந்தித்து வருகின்றனர். 
 
அந்த வகையில் கமல்ஹாசனை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தார் என்பதை சற்றுமுன் பார்த்தோம்.
 
இந்த சந்திப்புக்கு பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'நாளை புதிய அரசியல் கட்சி தொடங்கவுள்ள நடிகர் கமலின் அரசியல் பயணம் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். படிக்கும்போதே கமல்ஹாசனின் ரசிகனாக இருந்தேன்; தமிழகத்தில் எந்த வகையிலாவது மாற்றம் வராதா என எதிர்பார்க்கிறேன். கமல் இந்த மண்ணை சேர்ந்தவர், அவருக்கு எனது ஆதரவு உண்டு. 
 
ஆனால் அதே நேரத்தில் கமல் திராவிட அரசியலை பின்பற்றினால் அவருடன் இணைய மாட்டேன். மேலும் எனது மாநிலத்தை சேராத ஒருவர் என்னை ஆட்சி செய்வதையும் நான் அனுமதிக்க மாட்டேன்' என்று ரஜினியை மறைமுகமாக குறிப்பிடும்படி சீமான் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் பொதுக்கூட்டம் நடத்த அம்மன் கோவில் இடம் தேர்வு.. அறநிலையத்துறை அனுமதிக்குமா?

தங்கம் விலை மீண்டும் உச்சம்... இன்று ஒரே நாளில் ரூ.1600 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

நேற்று மதியத்திற்கு மேல் உயர்ந்த வகையில் இன்றும் பங்குச்சந்தை உயர்வு.. சென்செக்ஸ் நிலவரம்..!

சென்னையில் சுரங்க பாதையில் சிக்கிய பொக்லைன் இயந்திரம்.. போக்குவரத்து பாதிப்பு!

மகளிர் உரிமை தொகையை இரண்டாவது கட்ட விரிவாக்கம்.. முதல்வர் இன்று தொடங்கி வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments