Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உண்மையில் ஜெயலலிதா மனம் மாறியிருந்தால் சந்தோஷம்: திமுக பதில்

Advertiesment
உண்மையில் ஜெயலலிதா மனம் மாறியிருந்தால் சந்தோஷம்: திமுக பதில்
, செவ்வாய், 24 மே 2016 (18:32 IST)
முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று நன்றி கூறிய ஜெயலலிதா, அவருக்கு முன்வரிசையில் இடம் வழங்கப்படாததற்கு விளக்கம் அளித்தார்.


 
 
ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இடம், அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அது, ஸ்டாலினையோ, திமுகவையோ அவமானப்படுத்துவதற்காக அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என கூறிய ஜெயலலிதா, பதவியேற்பு விழாவுக்கு ஸ்டாலின் வருவது குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்தால், வரிசை முறையைத் தளர்த்தி ஸ்டாலினுக்கு முன் வரிசையில் இடமளிக்குமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டிருப்பேன் என்றார் ஜெயலலிதா.
 
ஜெயலலிதாவின் இந்த விளக்கத்திற்கு பதில் அளித்த திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், கடும் கண்டனத்திற்கு பிறகு முதல்வர் அறிக்கை விடுவது ஏற்றுக்கொள்ளகூடியது அல்ல, கடந்த பதவியேற்பு விழாவில் பேராசிரியர் அன்பழகனுக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது என்றார்.
 
மேலும், உண்மையில் முதல்வர் மணம் மாறியிருந்தால் சந்தோஷம். நல்லது நடப்பதற்கு திமுக என்றும் துணை நிற்கும் எனவும் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டில் சும்மா இருந்தாலும் மாதம் 2500 டாலர் சம்பளம்