ஜெயலலிதா எழுந்து வந்தால் பல பேர் உள்ளே செல்வார்கள்: துரைமுருகன் யாரை சொல்கிறார்?
ஜெயலலிதா எழுந்து வந்தால் பல பேர் உள்ளே செல்வார்கள்: துரைமுருகன் யாரை சொல்கிறார்?
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீண்டு எழுந்து வந்தால் பல பேர் உள்ளே செல்வார்கள் என திமுக துணைப்பொதுச்செயலாளர் துரைமுருகன் சூசகமாக கூறியுள்ளார்.
தர்மபுரி திமுக மாவட்ட செயலாளர் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி இல்லத்திருமண விழாவில் பேசிய துரைமுருகன் ஜெயலலிதாவின் கைரேகை அவருக்கே தெரியாமல் அவருடைய பல சொத்துக்களுக்கு உருட்டப்படுகிறது என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர் ஜெயலலிதா எழுந்து வந்தால் யார், யார் உள்ளே செல்வார்கள் என்பது தெரியும் என சூசகமாக கூறினார். துரைமுருகன் யாரை கூறினார் என்பது உங்களுக்கும் தெரியும். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.