Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டிருப்பேன்: நீதிபதி அதிரடி!

ஜெயலலிதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டிருப்பேன்: நீதிபதி அதிரடி!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2016 (13:26 IST)
ஜெயலலிதாவின் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையில் நீதிபதி வைத்தியநாதன் கூறிய கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
75 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் கடந்த 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பலரும் சந்தேகத்தை எழுப்பினர். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜோன்ஸ் என்பவர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதால் அதனை விசாரிக்க உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த மனுவை இன்று  விடுமுறைகாலை பெஞ்ச் நீதிபதி வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது கூறிய அவர் ஜெயலலிதாவின் மரணத்தில் தனக்கும் சந்தேகம் இருப்பதாக கூறினார். 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவின் எந்தவித புகைப்படமோ, வீடியோவோ வெளியிடவில்லை என்றார்.
 
ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கும் போது அரசு ஏன் மௌனமாக இருக்கிறது? ஜெயலலிதாவின் சிகிச்சை பற்றி முழுமையாக மத்திய அரசுக்கு தெரியும் ஆனால் அவர்கள் மௌனம் கலைக்காமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
 
நான் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்தால் அது வேறு மாதிரியாக இருக்கும். ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து விசாரிக்க உத்தரவிட்டிருப்பேன் என்றார் அதிரடியாக.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை.. பாமக தலைவர் அன்புமணி வரவேற்பு..!

நாளை காணும் பொங்கல்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பு..!

வெளிநாட்டினரிடம் வரி வசூலிக்க புதிய துறை.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு..!

வேலை நீக்கம் செய்கிறது மெட்டா நிறுவனம்.. 3600 பேருக்கு இமெயில் அனுப்பியதாக தகவல்..!

காதலனை தான் திருமணம் செய்வேன்.. வீடியோ வெளியிட்ட மகளை சுட்டு கொன்ற தந்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments