Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாய்ப்பு கொடுத்தால் நான் தேர்தலில் போட்டியிடுவேன்- குஷ்பு

Webdunia
சனி, 25 நவம்பர் 2023 (14:16 IST)
தமிழ் சினிமவின் பிரபல நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவுக்கு இணையவாசி ஒருவர் எக்ஸ் பக்கத்தில் அவரிடம் கேள்வி  கேட்டு பதிவிட்டிருந்தார்.

இதற்கு எக்ஸ் தளத்தில் பதில் அளித்த குஷ்பு திமுக இப்படித்தான் தவறான மொழியைப் பயன்படுத்துகிறது. இதுதான் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவமதிக்கவும், மன்னிக்கவும் உங்களதது சேரி மொழியில் பேச முடியாது என்று தெரிவித்தார். பின்னர்  சேரி என்ற வார்த்தைக்கு பிரெஞ்சில் அன்பு என்ற பொருள் என்றும் அன்பு என்ற அர்த்தத்தில் தான் பேசினேன் என்றும் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையம் வந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: என்னை பொருத்தவரை அனைவரும் சமம். எந்த இடத்திலும்   தகாத வார்த்தைகளை நான் பயன்படுத்துவதில்லை. யாரையும் தவறாகப் பேசவில்லை. இத்தனை வருட சினிமா வாழ்வில் நான் யாரையும் கெட்ட வார்த்தையில் திட்டியதில்லை. நான் ஊரில் இல்லாத நேரத்தில் எனது குடும்பத்திற்கு பாதுகாப்பு அளித்த தமிழக அரசுக்கு எனது மிகுந்த நன்றியை கூறிக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எனக்குத் தெரிந்த மொழியில் நான் பேசுவேன். வேளச்சேரி என்ற ஊர்ப்பெருயரிலும் சேரி என்ற பெயர் உள்ளது. நான் வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேனா இல்லையா என்பதை கட்சிதான் முடிவு செய்யும்! எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நான் தேர்தலில் போட்டியிடுவேன். இல்லையென்றால் நாடு முழுவதும் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

சேரி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு நடிகை குஷ்பு  கூறியதற்கு காயத்ரி ரகுராம், பா.ரஞ்சித் உள்ளிட்டோர்  கண்டனம் தெரிவித்த நிலையில், பட்டியல் சமூக மக்கள் குறித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வரும் திங்ட்கிழமை குஷ்புவின் வீடு முற்றுகையிடப்படும் என தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் பட்டியல் அணி தலைவர் ரஞ்சன் குமார் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகள் செயல்பட்ட வந்த குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்: வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி..!

திரைக்கு வர இருந்த கவுண்டம்பாளையம் படம் திரையிடபடாது ஒத்திவைப்பதாகவும் இது தொடர்பாக முதல்வரையும், செய்திதுறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்பேன்- இயக்குனரும் நடிகருமான ரஞ்சித்!

கள்ள உறவை கைவிட மறுத்த மனைவி! ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற கணவன்!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி சோதனை.. பரபரப்பு தகவல்..!

தொடர் ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தையில் திடீர் வீழ்ச்சி.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments