Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும் -ஜி.வி.பிரகாஷ்குமார்

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (15:14 IST)
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவில் வசிப்பவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. இத்தம்பதியரின் 17 வயது மகனும்,14 வயது மகளும் வள்ளியூரில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் சில வாரங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதனால், இத்தம்பதியரின் 17 வயது மகன் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

அதன்பின்னர், ஆசிரியர்கள் இவரது பெற்றோருக்குத் தொடர்பு கொண்டு மாணவனை பள்ளிக்கு அனுப்பும்படி கூறியுள்ளனர்.

பின், பள்ளிக்குச் சென்ற அவரிடம் ஏன் பள்ளிக்கு வரவில்லை என்று ஆசிரியர்கள் கேட்டதற்கு, சில மாணவர்கள் தன்னைத் தாக்குவதாக அவர் கூறியுள்ளார்.

இதையடுத்தது, நாங்கு நேரியில் வீட்டில் அந்த மாணவரும், அவரது தங்கையும் வீட்டில்  இருந்தபோது இரவுல் 10 :30 மணியளவில் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று  வீட்டிற்குள் அத்துமீறி  நுழைந்து இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. அருகில் இருந்தோர் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள  நிலையில், இதுபற்றி நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் தன்  டுவிட்டர் பக்கத்தில், தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.   சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments