Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

Siva
வியாழன், 21 நவம்பர் 2024 (17:55 IST)
சென்னை மாநகராட்சியில் 35,588 சாலையோர வியாபாரிகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நாளை முதல் வரும் 30ம் தேதி வரை அனைத்து மண்டலங்களிலும் நடைபெறவுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்துதல், சட்டம் மற்றும் விதிகளை பின்பற்றி நகர விற்பனை குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

நகர விற்பனைக் குழுவின் 06.11.2024 அன்று நடைபெற்ற 8வது கூட்டத்தில் மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட 35,588 சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக Chip பொருத்திய QR Code மற்றும் இணைய இணைப்பு (Weblink) பயன்பாட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்குவதற்காக 22.112024 முதல் 30.112024 வரை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

மேற்கண்ட சிறப்பு முகாம்களில் மாநகராட்சியால் வழங்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் கைபேசியினை கொண்டு வர வேண்டும். கைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அந்த கைபேசி எண் மாநகராட்சி பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, பழைய அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு புதிய அடையாள அட்டை வழங்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அதானி நிறுவனத்திற்கும் தமிழக மின்வாரியத்திற்கும் தொடர்பு இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி

இன்றிரவு 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கஸ்தூரியை பிடிக்க முடிந்த போலீசால் செந்தில் பாலாஜி தம்பியை பிடிக்க முடியலையா? செல்லூர் ராஜு

முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை.. ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமடைகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments