Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களில் ஒருவராக பணியாற்றுவேன் : மு.க. ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2018 (12:36 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வழியில் திமுக கட்சியை திறம்பட வழி நடத்திச் சென்று கொண்டிருக்கிறார் முக ஸ்டாலின். சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய ஸ்டாலின்  ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவேன் என்று சூளுரைத்தார். ஆனால் அவரது பேச்சுக்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் தன் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட கொளத்தூர் தொகுதிக்கு சென்ற ஸ்டாலின், பெரியார் நகரில் உள்ள திருமண மண்டபத்தில்  நடைபெற்ற கிருஸ்துமஸ் விழாவில் பங்கேற்றார். இவ்விழாவில் மக்களுக்கு கிருஸ்துமஸ் பரிசுப் பொருட்களை வழங்கினார்.
 
அப்போது  ஸ்டாலின் கூறியதாவது, மக்கள் பணியாற்றுவதற்காக மக்கள் தொடர்ந்து எனக்கு வாய்ப்பை வழங்கி வருகின்றனர். முதல்வராக மட்டுமின்றி எந்தபொறுப்பிற்கு வந்தாலும் நன் மக்களில் ஒருவராக இருந்து பணியாற்றுவேன்.மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள இரண்டு ஆட்சிகளையும் ஒழித்தால்தான் நாடு வளம்பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ChatGPTஐ தூக்கி சாப்பிட்ட சீனாவின் DeepSeek AI! - அப்படி என்ன வசதி இருக்கு?

தமிழ்நாட்டில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்: மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

பழனி முருகன் கோவிலில் கட்டணம் இல்லாத தரிசனம்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

முடிவுக்கு வந்தது வடகிழக்கு பருவமழை.. இனி வெயில் தொடங்கும்! - வானிலை ஆய்வு மையம்!

12 வயது, 14 வயது, 16 வயது சிறுமிகளுடன் காதல்.. சென்னை சிறுவன் உள்பட மூவர் கைது..

அடுத்த கட்டுரையில்