ஆடைகளை விற்றாவது கோதுமை விலையைக் குறைப்பேன்- பாகிஸ்தான் பிரதமர்

Webdunia
திங்கள், 30 மே 2022 (17:40 IST)
பாகிஸ்தான் நாட்டில்  பிரதமர் ஷபாஸ் ஷெரிப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இலங்கையில் ஏற்பட்டதுபோல் தற்போது அண்டை  நாடான பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, கைபர்  பாக்துன் குவா மாகாணத்தில்  கோதுமை மாவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதற்கு  பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவாது:

கைபர் பாக்துங்குவா மாகாண முதல்வர் 24 மணி நேரத்திற்குள் கோதுமை மாவின் விலையை ரூ.400க்கு கொண்டு வர வேண்டும். அவர் அப்படி செய்யவில்லை என்றால் என் ஆடைகளை விற்றாவதும் நான் கோதுமை மாவின் விலையை குறைந்த விலைக்குக் கொண்டு வருவேன்.

முன்னாள் பிரதமர் இம்ரான் கான். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல்,  ஆட்சியில்  பொருளாதாரம் இக்கட்டான நிலைக்குச் சென்றுள்ளது.  என் உயிரைக் கொடுத்தாவது நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவை அடக்க புது ப்ளான்! ஜப்பானோடு கைக்கோர்த்த அமெரிக்கா! - என்ன டீலிங் தெரியுமா?

பட்டப்பகலில் பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை.. லவ் ஜிகாத் விவகாரத்தால் நடந்த விபரீதமா?

மத்திய அரசை விமர்சித்து கைத்தட்டல் வாங்கலாம்! ஓட்டு வாங்க முடியாது! - முதல்வருக்கு எல்.முருகன் பதில்!

இந்தியாவின் ஐடி மாநிலம் ஆகிறதா கேரளா? பினராயி விஜயனின் பிரமாண்ட இலக்கு..!

டெல்லியில் செயற்கை மழை முயற்சி தோல்வி.. மிகப்பெரிய மோசடி என ஆம் ஆத்மி குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments